• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Director Speaks

அன்பு + தியாகம் = உண்மையான விடுதலை

Thursday, August 1, 2024

 

ஆகஸ்டு மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது, ஒன்று: அன்னையின் விண்ணேற்பு பெறுவிழா, இரண்டு: நமது தாய் நாட்டின் சுதந்திர தினவிழா. அன்னையின் விண்ணேற்பும் இந்திய நாட்டின் விடுதலையும் ஒரு பொதுவான செய்தியை நமக்கு தருகின்றது. நமதுவிடுதலைமற்றும்சுதந்திரம்என்பதே அந்த பொதுவான கொண்டாட்டம்.

 

விண்ணேற்பு பெருவிழா என்பது மாியன்னை கடவுளின் தாய், தன்னுடைய இவ்வுலக வாழ்நாட்களை முடித்து தன் ஆன்மாவோடும், உடலோடும், விண்ணக மாட்சியுடன் எடுத்துச் செல்லப்பட்டார் என்ற மறையுண்மையை திருஅவை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றது. இந்த மறையுண்மையின் நிகழ்வு இவ்வுலகில் யார் யாரெல்லாம் கடவுளின் திருவுளப்படி நடந்து ஒரு புனிதமான வாழ்வை வாழ்ந்து வருகிறார்களோ அவர்கள் விலைமதிப்பு பெறாத விடுதலையையும், சுதந்திரமாகவும், கடவுளின் விருப்பப்படி பெரும் ஆசீர்வாதங்களை வெகுமதியாக பெற்றுக்கொள்வார்கள். அதேப்போன்று நமது தாய் நாடு இந்தியாவில் யார் ஒருவர் மனித நேயத்தோடு வாழ்ந்து மனிதமாண்பை மதித்து, எல்லோரிடமும் சகோதர சகோதாிகளாய் பழகி, சுதந்திரத்துடன் வாழ்ந்து பிறரின் சமூக அரசியல் விடுதலைக்கு பாடுபட்டு தியாகம் செய்து வாழ்கிறார்களோ அவர்கள் அனைவரும் இந்நாளில் எல்லோராலும் நினைவுக் கூர்ந்து கொண்டாடப்படுவார்கள்.

 

இவ்விரு விழாக்களும் ஒரே ஆன்மீகத் தாக்கத்தை நமக்கு ஏற்படுத்த வேண்டும். இவ்விழாக்கள் நமக்கு தீயவர்களிடமிருந்து விடுதலையையும், பாவத்திலிருந்து மன்னிப்பையும், அடிமைத்தளையிலிருந்து சுதந்திரத்தையும் பெற வேண்டுமானால் நாம் வாழும் இவ்வுலகில் விடுதலைப்பெற்ற மக்களாக வாழ்ந்து, கடவுளின் அன்பை பகிர்ந்து, எல்லோரோடும் இன்பமுடனும், சுதந்திரமுடனும், வாழ வேண்டும்.

 

உண்மையான விடுதலை என்பது, நாம் மாியன்னையைப்போல் தூய்மையான வாழ்வு வாழ்ந்து, பாவத்தை ஒழித்து, எந்த தீமைக்கும் அடிமையாகாமல் வாழ்ந்தால் நாம் இவ்வுலகில் உண்மையான விடுதலைப்பெற்றவர்களாய், நோ;மையாளர்களாய், தீயோரை வென்றவர்களாய், பாவத்தை ஒழித்தவர்களாய், சாவை வென்றவர்களாய், வாழ்வோம். இவ்விரு பெருவிழாக்களும் நம்மை உலகிற்கு ஒளியாய், உப்பாய், புளிப்பு மாவாய், உண்மையிலும், நேர்மையிலும், அன்பிலும், மனிதாபிமானத்திலும், தியானத்திலும், மகிழ்ச்சியிலும், சகோதரத்துவத்திலும் வாழ்ந்து புனிதமான வாழ்க்கை வாழ இவ்விழாக்கள் நம்மை அழைக்கின்றது.

 

உண்மையான விடுதலை என்பது கடவுளை அன்பு செய்து வாழ்வது, கடவுளை அன்பு செய்வது என்பது தம் சகோதர சகோதாிகளை அன்பு செய்து வாழ்வது, கண்ணால் காணும் இந்த சகோதர சகோதாிகளை அன்பு செய்யாது, நாம் கண்ணால் காணாத கடவுளை எப்படி அன்பு செய்ய முடியும்? எனவே அன்பு செய்யாத அடிமைகள், உண்மையான விடுதலையும், சுதந்திரத்தையும் பெற முடியாது. பிறரை அன்பு செய்து வாழ்வோர் விடுதலைப் பெற்றவர்களாவர். உண்மையான அன்பு தன் உயிரையும் தந்து, பிறர் வாழ தியாகம் செய்யும் என்பதே உண்மை.

 

இந்த உண்மையான விடுதலையை நம் வாழ்வில் பெற வேண்டுமானால் நாமும் மற்றவர்களிடம் உண்மையான அன்புடனும், தியாகத்துடனும் வாழ்ந்தாலே நாம் இயேசுவின் உண்மையான பிள்ளைகளாய் வாழ்வோம் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு அவரில் இணைந்து செபித்து வாழ்வோம்.

 

 

என்றும் அன்புடன்

அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச.

இயக்குனர் – தீபகம்

 


Share: