• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Director Speaks

வாக்களிப்பது நம் கடமை

Saturday, April 27, 2024

 

தீபகத்திலிருந்து இறையாசீர்.

அன்பார்ந்த தீபகச் சுடர் வாசகர்களே!

 

சீசருக்குரியதைச் சீசருக்கும் கடவுளுக்குரியதை கடவுளுக்கும் கொடுங்கள்.... 

 

சனவரி 25, 2019ஆம் ஆண்டு நாம் “தேசிய வாக்காளர்கள் தினம்” கொண்டாடினோம். 2011ஆம் ஆண்டு சனவரி 25ல் தேசிய தேர்தல் ஆணையம் ஒன்றை நிறுவியது. (ECI) இவை யாவும் இந்திய மக்களாகிய நாம் அனைவரும் நம் கடமையை அறிந்து வாக்களிக்க வேண்டும், அதை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக செய்தது. உண்மையில் இந்தியாவில் அதன்பிறகு வாக்காளர்களின் சதவீதம் சற்று கூடியிருந்தது. இந்திய வாக்காளர்கள் தங்கள் கடமையையும், உரிமையையும் அறிந்து இந்த தேசிய கடமையை எவ்வித பயமும் இன்றி, துணவுடன் நிறைவேற்றவும், நம் சனநாயக கடமையை ஆற்றவும் இவ்வாணயம் உறுதி கொடுக்கின்றது.

 

கடந்த காலங்களில் இந்திய வாக்காளர்கள் இந்த சனநாயக கடமையை சரிவர செய்யவில்லை என்பதே வருத்தமான உண்மை. இன்னும் 80 சதவீதத்திற்கு குறைவானவர்களே வாக்களிக்கின்றனர். அதுவும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களே இந்த கடமையை செய்கின்றார்கள். பல கோடி மக்கள் அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? அல்லது இருந்தும் போய் வாக்களிக்கின்றனரா? என கேள்வி கேட்டால் உண்மை மிகவும் வருத்தப்பட வேண்டியதாகும். இதில் ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், புலம் பெயர்ந்தோர் என பலர் இந்த வாக்காளர் பட்டியலில் இடம் பெருவதில்லை, வாக்களிப்பதும் இல்லை.

 

சில நேரங்களில் தேர்தலின்போது தங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதில்லை, மாயமாக மறைந்து விடுகின்றது. இருந்தாலும் தங்களுக்கு பதிலாக தாங்கள் வருவதற்கு முன்னே சிலர் வாக்கு போடப்பட்டு வருகிறது. இதற்கு இன்றுவரை யாரும் பதில் சொல்லியது இல்லை. பல நாடுகளில்; “ஓட்டு உரிமை” என்பது “அடிப்படை உரிமை” நம் நாட்டில் இந்தியாவில் மட்டுமே இது “சட்டப்பூர்வமான உரிமை”. இருந்தாலும் இது ஒரு “புனிதமான கடமை”. ஏப்ரல் மாதம் 2024, (ECI) தேர்தல் ஆணையம் நம் நாடாடுமன்ற தேர்தலை நம் மாநிலத்தில் அறிவித்து இருக்கின்றது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் அல்லது ஓட்டு போட வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. எனினும் ஒரு சில வழிமுறைகளை இங்கு நாம் கடைபிடித்தால் நம் நாட்டிற்கும் நமக்கும் நன்மை உண்டாகும்.

 

  • 18 வயது அதற்கு மேல் உள்ள அனைவருமே கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் (அ) ஓட்டு போட வேண்டும். நம் சனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.
  • ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு நாம் வாக்களிக்க வேண்டும்.
  • நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மதித்து, நடைமுறைபடுத்தி, வெளிப்படையான அரசியல் செய்யும் கட்சிக்கு, ஏழைகளை மதித்து, மனிதநேயத்தை கடைபிடித்து, மனித மாண்பை போற்றி, சமூக நீதியை கடைப்பிடித்து நேர்மையோடும், நீதியோடும் மக்கள் அமைதியுடன் மகிழ்ச்சியுடன் ஒன்றுபட்டு வாழ, சாதி, மத, இன பேதமின்றி எல்லோருக்கும் எல்லாம் சமமாக கிடைக்கவும் வழி செய்யும், அரசியல் கட்சிக்கு நம் வாக்குகளை அளித்து, நம் கடமையை நிறைவேற்றுவோம்.
  • அரசியல்வாதிகளில் சுகாதாரத்திற்கானவர், யார், என நல்லவர், அறிந்து, எழைகளுக்கானவர், பட்டியலினத்திற்கானவர், கல்விக்கானவர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினரை அன்பு செய்து, அவர்கள் உயர வழிவகுப்பவர் யார் என அறிந்து அவருக்கு வாக்களிக்க வேண்டும்.
  • அரசியல்வாதிகள் யார் என்பதை அறிந்து அவர்கள் கடைப்பிடிக்கும் அரசியல் கொள்கை, கோட்பாடு, என்ன என்பதை அறிந்து, அவர்களுடைய இலக்கு மற்றும் தேசிய எண்ணம் மற்றும் சமூக அக்கறை, இவற்றையும் அறிந்து நாம் வாக்களிக்க வேண்டும்.
  • தேர்தல் வாக்குறுதிகளை படித்து பகிர்ந்து அவற்றைப் பற்றி பொது வழியில் விவாதித்து அவை அனைத்தும் நிறைவேற்றக் கூடியதா? இல்லை “சும்மா” வெற்றுப் பேச்சா? என அறிந்து வாக்களியுங்கள்.

 

எந்த அரசியல் கட்சி நமக்கானதோ, ஏழைக்களுக்கானதோ, பழங்குடியினருக்கானதோ, ஆதி குடிமக்களுக்கானதோ, மகளிருக்கானதோ, சிறுபான்மையினருக்காகவோ, குழந்தைகளுக்கானதோ, மாற்றுத்திறனாளிகளுக்கானதோ, திருநங்கை/திருநம்பிகளுக்கானதோ மற்றும் மனித உரிமை, நீர், நிலம், காற்று, நல்ல சுகாதாரம், மருத்துவம், கல்வி, உணவு, உலக வெப்பமாதலைத் தடுத்தல், வேலை வாய்ப்பு, உழவுத் தொழில் மேம்பாடு, நாட்டின் பாதுகாப்பு, நல்ல வெளிப்படையான, ஊழலற்ற அரசாட்சி, இவைகளுக்கு உத்திரவாதம் தருமோ அந்த கட்சிகளைத் தேர்வு செய்து நம் கடமையை உணர்ந்து பொறுப்புடன் நம் பொன்னான வாக்குகளை முதன்மையாகச் சென்று வாக்களித்து நம் கடமையை நிறைவேற்றுவோம்.

 

வாழ்க சனநாயகம் வாழ்க நம் மணித்திரு நாடு


என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச.
இயக்குநர் - தீபகம்

 


Share: