• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Director Speaks

உயிர்த்து உயிர்க் கொடுப்போம்

Wednesday, March 27, 2024

 

தீபகத்திலிருந்து இறையாசீர்.

அன்பார்ந்த தீபகச் சுடர் வாசகர்களே!


உங்கள் அனைவருக்கும் உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விழா நல்வாழ்த்துக்களும் செபங்களும்.

 

இந்தியத் திருநாட்டில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் இந்நாட்களில் பலர் தங்களுடைய எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள். என்ன நடக்குமோ? நாம் துன்புறுத்தப்படுவோமோ? நாடுகடத்தப்படுவோமோ? உரிமைகளை இழப்போமோ? அதிலும் குறிப்பாக நாம் மதம், இனம், மொழி, சாதி எனப் பிரிக்கப்பட்டு அழிக்கப்படுவோமோ? என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த உயிர்ப்பின் பெருவிழா அர்த்தமுள்ளதாகின்றது. இயேசுவின் ‘உயிர்ப்பு” நமக்கு உண்மையான ‘விடுதலை” ஒன்று உண்டு என்ற எதிர்நோக்குடன் காத்திருக்கச் செய்கின்றது. சாவைப்போன்று ஒரு பெரும் துன்பம் இவ்வுலகில் இல்லை. ஆனால் இயேசு ‘சாவை வென்றுவிட்டார்.” நாமும் பாவம் என்ற சாவை ஒருநாள் முழுமையாக வெல்வோம், நித்திய வாழ்வில் பங்கு பெறுவோம் என்பதை இவ்விழா நமக்கு அறிவுறுத்துகிறது.

 

இயேசுவின் உயிர்ப்பு இருளிலிருந்து பேரொளிக்கு நம்மை வழிநடத்திச் செல்கிறது. கல்லறை இருளிலிருந்து மூன்றாம் நாள் பேரொளியின் வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கின்றார். எனவே நாமும் கிறிஸ்துவில் இறந்து, உயிர்த்து, பாவம் என்ற இருளை ஒழித்து, நித்திய வாழ்வு என்னும் பேரொளியில் வாழ்வோம் என்ற எதிர்நோக்கை இவ்விழா நமக்கு கற்றுத் தருகிறது. இயேசுவின் உயிர்ப்பில் பங்கு பெறும் திருமுழுக்குப் பெற்ற நம் அனைவருக்கும் உயிர்த்த ஆண்டவரின் வல்லமையுண்டு. இந்த மாபெரும் வல்லமையால் இவ்வுலகை நாம் வெல்ல முடியும். உலகில் நாம் காணும் வெறுப்பு, பகைமை, பிரித்தாளுதல், போட்டி, பொறாமை, கொலை, கொள்ளை மற்றும் எல்லாவிதமான தீமைகளையும் வென்று நன்மை, அன்பு, ஒற்றுமை, உறவு, வாழ்வு, மகிழ்ச்சி, போின்பம் என உயிர்ப்பின் மக்களாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றது.

 

உயிர்ப்பைக் கொண்டாடும் நாம் இவ்வுலக சவால்களை நேரடியாக சந்திக்கவும், உண்மையை உலகிற்கு எடுத்துரைக்கவும், எதிரிகளைக்கண்டு அஞ்சாமல் நம்பிக்கை அறிக்கையிடவும். நம்மை அழைக்கின்றது. எனவே உயிர்த்த ஆண்டவரின் வல்லமையோடு நாம் எல்லாவிதமான தீய சக்திகளை எதிர்த்து போராடவும், வெற்றிக் கொள்ளவும், அன்பு, அமைதி, உண்மை, நீதி, நோ;மை இவைகள் யாவும் உயிர்ப்பின் கொடைகள் எனவும், அதை உயிர்த்த ஆண்டவரில் நம்பிக்கைக்கொள்வோர், என்றும் இவ்வுலகில் இறுதிநாள்வரை போராடி வெற்றி பெறுவர் எனவும், நாம் உயிர்ப்பின் மக்கள் எனவும், நாம் மகிழ்ச்சியின் மக்கள் எனவும், வெற்றியின் மக்கள் எனவும் எந்த நிலையிலும் நாம் வெற்றிபெறுவோம் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து வாழ்வோம்.

 

என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச.
இயக்குநர் - தீபகம்

 


Post a comment

Please Sign in or Sign up to leave a comment.

0 Comment(s)

 

No Comments!

 

 


Share: