• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. வியாழன், 6 ஜூன் 2024. இறையாட்சிக்கு நெருக்கம்

Thursday, June 6, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
வியாழன், 6 ஜூன் 2024
பொதுக்காலம் 9-ஆம் வாரம் – வியாழன்
2 திமொத்தேயு 2:8-15. மாற்கு 12:28-34

 

இறையாட்சிக்கு நெருக்கம்

 

‘எரிபலிகளும் வேறு பலிகளும் அல்ல, மாறாக, இறையன்பு, பிறரன்பு என்னும் கட்டளைகளைக் கடைப்பிடித்தலே இறையாட்சியை நோக்கி நாம் நெருங்கிவரச் செய்கின்றன.’

 

இயேசுவை போதகர் அல்லது ஆசிரியர் என அவருடைய சமகாலத்தவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அவருடைய போதனையை அல்லது அறிவுத்திறனை சோதிக்கும் நோக்குடன் மூன்று குழுவினர் இயேசுவிடம் வருகிறார்கள்: ‘பரிசேயர்கள்-ஏரோதியர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள்.’ முதல் மற்றும் இரண்டாம் குழுவினர் இயேசுவின் பதிலிறுப்பைக் கேட்டவுடன் அவ்விடம் விட்டு நகல்கிறார்கள். ஆனால், மறைநூல் அறிஞர் இயேசுவின் விடையை ஏற்றுக்கொண்டதோடு, இயேசுவின் மனநிலையைப் பிரதிபலிக்குமாறு மறுமொழி கூறுகிறார்.

 

மறைநூல் அறிஞர் திருச்சட்டம் அறிந்தவராக இருக்கிறார். அவருடைய எண்ணம் இயேசுவைச் சோதிப்பதே. ஆனால், இயேசு சரியான விடையைத் தந்ததோடு, கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்கிறார்:

 

(அ) நீட்சி

 

கடவுளை அன்பு செய்தல் என்னும் முதன்மையான கட்டளையை சற்றே நீட்டி, ஒருவர் மற்றவரை அன்பு செய்தலையும் முன்னிறுத்துகிறார் இயேசு.

 

(ஆ) நிரப்புதல்

 

எரிபலிகள் வேறுபலிகளை எடுத்துவிட்டு, கட்டளைகளைக் கடைப்பிடிப்பதைக் கொண்டு நிரப்புகிறார் இயேசு.

 

இன்றைய வாசகம் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

 

(1) முதன்மைப்படுத்துதல்

 

தம் சமகாலத்தில் விளங்கிய 618 விதிமுறைகளில் முதன்மையானவை எவை என முன்மொழிகிறார் இயேசு.

 

(2) அறிவுத்திறன் கொண்டிருத்தல்

 

‘அன்பு என்பது அறிவுசார்ந்த செயல்’ என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில், அன்பில் ஒருவர் தன்னையே முழுமையாக அறிந்தவராகவும், முழு விருப்பத்தோடு செயல்படுபத்துபவராகவும் இருக்கிறார்.

 

(இ) நெருக்கம்அதிகரித்தல்

 

கோவிலில் நாம் அர்ப்பணிக்கும் ஆடுமாடுகளும் மற்ற பலிகளும் கடவுளுக்கும் நமக்கும் நெருக்கத்தை உருவாக்குகின்றன. ஆனால், இந்நெருக்கம் இடம் சார்;ந்தது. கட்டளைகளைக் கடைப்பிடித்தல் உள்ளம் சார்ந்ததாகவும், இன்னும் நெருக்கமானதாகவும் இருக்கிறது.

 

நிற்க.

 

‘சண்டையிடுவது அல்ல, மாறாக, சாட்சியம் பகர்வதே நம்மை ஒருவர் மற்றவரிடம் இணைக்கிறது’ . (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 117).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: