ற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ‘மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே!’ என்கிறார். அவர் அவர்களிடம், ‘நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?’ என்றார். அவர் சொன்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.’
தந்தையின் அலுவல் என்பது தச்சு வேலை இல்லையா? என்னும் கேள்வி யோசேப்புக்கு எழுகிறது. ஆனால், யோசேப்பு மௌனம் காக்கிறார். ‘இவர் ஏன் இப்படிப் பேசுகிறார்?’ என்று குழந்தையைக் கேட்கவில்லை. மாறாக, ‘இவர் எப்படிப் பேசுகிறார்!’ என வியக்கிறார். கேள்விக்குறியிலிருந்து ஆச்சர்யக்குறிகள் நிறைந்த வாழ்வுக்கு நகர்வதே முதிர்ச்சி.
யோசேப்பின் மேற்காணும் நான்கு பரிமாணங்களை அவர் எப்படிப் பெற்றார்?
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு விடை அளிக்கிறது: நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு.
முதல் வாசகத்தில், தாவீது அரசர் ஆண்டவராகிய கடவுளுக்கு கோவில் ஒன்றைக் கட்டியெழுப்ப விரும்புகிறார். தாவீதோடு உரையாடுகிற ஆண்டவர் அவருடைய நம்பிக்கைப் பார்வையை அகலமாக்குகிறார். ஆண்டவரே தாவீதுக்கு ஓர் இல்லம் கட்டவதாக வாக்களிக்கிறார். அந்த இல்லத்தை தாவீது நம்பிக்கைக் கண்கள் கொண்டு பார்க்கிறார்.
இரண்டாம் வாசகத்தில், ஆபிரகாமின் நம்பிக்கை பற்றிய கருத்துருவை முன்மொழியுமுன், ‘அவர் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோலத் தோன்றினாலும் எதிர்நோக்கினார்!’ என்று எழுதுகிறார் பவுல். காத்திருத்தல், பொறுமை ஆகியவற்றைக் கொண்டிருக்கிற ஒருவரே எதிர்நோக்க இயலும்.
நற்செய்தி வாசகத்தில், ஐயம் விடுத்து மரியாவை ஏற்றுக்கொள்கிறார் யோசேப்பு. அவர் கடவுள்மேல் கொண்டிருந்த, மரியாவின்மேல் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடாக இருக்கிறது. கடவுள் அன்பில் மனித அன்பை இணைத்துப் பார்க்கிறார்.
இன்று நாம் கொண்டாடும் நல்தந்தை யோசேப்பு, நாம் நம்பிக்கையிலும் எதிர்நோக்கிலும் அன்பிலும் வளர நமக்காக பரிந்து பேசுவாராக!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: