இன்றைய இறைமொழி
சனி, 16 நவம்பர் 2024
பொதுக்காலம் 32-ஆம் வாரம், சனி
3 யோவான் 5-8. திருப்பாடல் 112:1-2. 3-4.5-6. லூக்கா 18:1-8.
இடைவிடாத நம்பிக்கை
இடைவிடாத இறைவேண்டல் இடைவிடாத நம்பிக்கையில் ஊற்றெடுக்கிறது. இத்தகைய நம்பிக்கை துன்பங்களைத் தாங்கி நிற்கிறது. கைம்பெண்ணின் இடைவிடாத கைம்பெண்ணின் முயற்சி அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. கடவுளுடைய உதவி அவருடைய இரகக்கத்தில் மட்டுமல்ல, நீதியிலும் புறப்படுகிறது. கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவே நம்பிக்கையின் அடிப்படை.
முதல் வாசகச் சிந்தனை (3 யோவான் 5-8)
(அ) விருந்தோம்பலில் பிரமாணிக்கம்: நம் உடன் நம்பிக்கையாளர்களுக்கு நாம் செய்யும் இரக்கச் செயல்களையும் கனிவான செயல்பாடுகளையும் பாராட்டுகிறார் யோவான். செயல்பாடுகள் வழியாகவே நம் நம்பிக்கை வெளிப்படுகிறது.
(ஆ) உண்மைக்காக இணைந்து உழைத்தல்: நற்செய்தியை அறிவிப்பவர்களுக்குத் துணை நிற்கும்போது நாம் கடவுளுடைய பணியில் பங்கேற்கிறோம்.
(இ) கடவுளுக்கு மாட்சி அளிக்கிற கொடை: எதையும் எதிர்பார்க்காமல் நாம் கொடுக்கத் தொடங்கும்போது கடவுள்போல நாம் செயலாற்றுகிறோம்.
பதிலுரைப் பாடல் சிந்தனை (திபா 112:1-2, 3-4, 5-6)
(அ) ஆண்டவருக்கு அஞ்சுவோர் பெறுகிற ஆசி: கடவுளுடைய கட்டளைகளைப் பின்பற்றுபவர்கள் வலிமையும் வளமையும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். கடவுளில் வேரூன்றிய வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கிறது.
(ஆ) இருளில் ஒளி: நல்லோர்மேல் ஒளிர்கிற கடவுளின் ஒளி அவர்களுக்கு எதிர்நோக்கும் வழிகாட்டுதலும் தருகிறது.
(இ) நல்லோரின் நினைவு நீடிக்கும்: நல்லோர் கடவுளின் நன்மைத்தனத்தைக் கொண்டிருப்பதால் அவர்களுடைய செயல்கள் நீடித்த பயன்தரும்.
நற்செய்தி வாசகச் சிந்தனை
(அ) இறைவேண்டலில் விடாமுயற்சி: இடைவிடாத இறைவேண்டலில் நிலைத்திருப்பவருடைய இறைவேண்டலைக் கடவுள் சரியான நேரத்தில் கேட்கிறார்.
(ஆ) கடவுளின் நீதியும் பிரமாணிக்கமும்: கடவுள் அச்சமும் மனித மதிப்பும் இல்லாத நடுவர் நீதி வழங்குகிறார். கடவுள் எப்போதும் பிரமாணிக்கத்துடன் செயல்படுகிறார்.
(இ) இடைவிடாத நம்பிக்கை: இடைவிடாத நம்பிக்கை இடைவிடாத இறைவேண்டலாகக் கனிகிறது.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ நம்பிக்கையில் நிலைத்திருக்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 250).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: