இன்றைய இறைமொழி
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 20-ஆம் வாரம் – வெள்ளி
எசேக்கியேல் 37:1-14. மத்தேயு 22:34-40
மாற்றம்தரும் அன்பு
நம் நம்பிக்கையின் அடித்தளத்தையும் கடவுளுடைய ஆவியாரின் வல்லமையையும் நாம் கற்றுக்கொள்ள நம்மை அழைக்கின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. அன்பு உயிர்தரக்கூடியது, கடவுளின் ஆவி மாற்றம் வருவிக்கக் கூடியது.
திருச்சட்டம் மற்றும் இறைவாக்குகளைச் சுருக்கமாக மொழிகிற இயேசு, இறையன்பையும் பிறரன்பையும் அடித்தளங்கள் என மொழிகிறார். திருச்சட்ட அறிஞருடைய சோதனையிலிருந்து தப்புகிறார் இNயுசு.
அன்பே திருச்சட்டத்தின் நிறைவு. கடவுளை அன்பு செய்தல் என்வது கடவுளை நம் வாழ்வின் ஆதாரம் என ஏற்றுக்கொள்தல் ஆகும். பிறரை அன்பு செய்தல் என்பது நம் நிலையில் மற்றவரை நிறுத்தி அவரை மாண்புடன் நடத்துதல் ஆகும்.
முதல் வாசகத்தில், உலர்ந்த எலும்புகள் எடுத்துக்காட்டை விவிரிக்கிற எசாயா, உயிரற்ற எலும்புகள் உயிர்பெறக் காரணம் கடவுளின் ஆவியார் என மொழிகிறார் எNசுக்கியேல்.
அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல. மாறாக, பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்படும் செயல்.
உலர்ந்த எலும்புகள் போல நம் வாழ்க்கை நிற்கும்போது நமக்கு உயிர்கொடுக்க வருகிறார் கடவுள். அவரிடமிருந்து உயிர்பெறும் நாம் மற்றவர்கள்மேல் அன்புகூர்வது நலம்.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் கடவுளின் அன்பால் மாற்றம் பெறுகிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 180).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: