தீபகம், தொன்போஸ்கோ மறைபணி மையம்
கலைவழி இறைமொழி
கோடை பயிற்சி முகாம் – 2025
(Residential Summer Camp - 2025)
ஆளுமை வளர்ச்சி - நாடகப் பயிற்சி
இடம்: தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் - 635601
தேதி: மே 21 - 30, 2025 (பத்து நாட்கள்)
கலைகள் மனித மனதோடு உறவாடுபவை, மனித மனங்களை, சிந்தனையை, அதன் வழியான செயல்பாடுகளை, உயிர்ப்புள்ளதாக வைத்துக்கொள்ளவும், செயலூக்கமுள்ள ஒன்றாக ஆக்கிக் கொள்ளவும் கலைகள் பெருந்துணையாக அமையும். ஏதேனும் ஒரு கலையில் ஈடுபடுதல், அதனைக் கற்றுக் கொள்ளுதல் என்ற செயல்பாடு நம் வாழ்க்கையில் பல்வேறு ஒழுங்குகளையும், நேர்த்தியையும், உறுதிப்பாட்டையும் கொண்டு வந்து சேர்க்கும். அதிலும் கலைகளின் சங்கமமாக இருக்கும் நாடகத்தைப் பயிற்சி செய்வது என்பது, பயிற்சி பெறுபவரின் உடல் - குரல் - மனம் ஆகியவற்றைப் பட்டைத் தீட்டுவதோடு மூன்றுக்குமான உணர்வுப் பூர்வமான பிணைப்பை அறிந்து செயலாற்றவும் நம்மை உந்தித்தள்ளும்.
நாடகப் பயிற்சி முறைகளைத் தனிமனித ஆளுமை வளர்ச்சிக்கும் உளவியல் மருத்துவ முறைக்கும் பயன்படுத்தலாம் என்பது ஒரு கோட்பாடு. அந்த வகையில் இப்பயிற்சிகளை மேற்கொண்டு வியக்கத்தக்க வளர்ச்சிகளை எட்டியிருப்பதற்குச் சான்றுகள் ஏராளம் உண்டு. எனவே, முழுமையான மனிதனை உருவாக்குவதற்கான பயிற்சியாக இப்பயிற்சியை வடிவமைத்துப் பயன்படுத்துதல் சிறப்பான ஒன்றாகும். இந்தப் பயிற்சிகளில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் தங்களின் பின்னூட்டங்களில் (feedback) இப்பயிற்சி தன்னுடைய வாழ்வின் திசைப்போக்கை எவ்வாறு மாற்றியது என்றும், தன்னம்பிக்கையை வளர்த்தது என்றும், சுறுசுறுப்பாக்கியது என்றும் கருத்துரைத்திருக்கின்றார்கள். தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நல்ல - இனிய - கொண்டாட்ட உணர்வுகளை இப்பயிற்சிகள் தந்ததாகவும் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்கள்.
கலைவழியாக இறைவனின் மொழியைப் பற்றிக் கொள்ளலாம், அடுத்தவர்களுக்கும் பகிர்ந்தளிக்கலாம் என்ற உயரிய நோக்கோடு தேர்ந்தெடுக்கப்பட்ட கத்தோலிக்க மாணவ - மாணவியருக்கு பத்து நாட்களுக்குமான உணவு, தங்குமிடம், பயிற்சி யாவற்றையும் இலவசமாக அளித்து அவர்களின் ஆளுமையில் ஆக்கப் பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது தீபகத்தின் பெருவிருப்பம். இப்பயிற்சிகள் உங்களிடம் நல்ல மகிழ்ச்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் வாழ்க்கையின் திசைப்போக்கை மாற்றும் பயிற்சிகளாகவும் இவை அமையும் என்பது உறுதி. உற்சாகத்தோடு பங்கேற்க வாருங்கள், வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
1. யோகாசனப் பயிற்சி
2. சிலம்பம் முதலான வீரக்கலைகள்
3. ஒயிலாட்டம் - கழியலாட்டம் - தப்பாட்டம் - கும்மி முதலான கிராமிய நடனங்கள்
4. உடல் இயக்கம், சைகைகள், முகபாவனைகள், உடல் மீள்தன்மைப் பயிற்சி
5. குரல் பயிற்சி, உடற்பயிற்சி, கற்பனைத் திறன் பயிற்சி
6. உடல்-குரல்-மனம் ஒருங்கிணைப்பு உச்சரிப்புப் பயிற்சி, ஏற்ற-இறக்கத்தோடு மொழியாடல்
7. இசைப்பயிற்சி, தாள-லய உணர்வு
8. கவனக்குவிப்புப் பயிற்சி, நினைவாற்றல் பயிற்சி
9. நடிப்பு முறைகள், காலம் - இடம் பற்றிய புரிதல், மனவழி உருவாக்கம்
10. தனித்தன்மை பேணுதல் தன் அடையாளம் காத்தல், கருத்தியல் வளர்ச்சி, அரசியல் சமூக விழிப்புணர்வு
11. நம்பிக்கை வளர்த்தல், குழு ஒத்திசைவு, பிரச்சனைகளைப் புரிதல், பிரச்சனைகளைக் கையாளுதல்
12. பாத்திரங்கள் அவதானிப்பு, கதை உருவாக்குதல், கதை சொல்லல், சூழலை வளர்த்தெடுத்தல்
13. பின் அரங்கப் பயிற்சி, மேடை நிர்வாகம்
14. முக ஒப்பனை, முகமூடிகள் உருவாக்கம், மேடை ஒளியமைப்பு, வண்ணங்கள் புரிதல்
15. அரங்க மேலாண்மைப் பயிற்சி பின்னரங்க மேலாண்மை நாடகங்களைப் புரிதல், நாடக விமர்சனம், ஒலி-ஒளி சாதனங்களைக் கையாளுதல்
1. உங்களிடமுள்ள தனித்திறன்களை அடையாளம் கண்டு வளர்த்துக் கொள்ள முடியும்
2. தயக்கத்தையும் மேடைக் கூச்சத்தையும் அகற்றிக் கொள்ள முடியும்
3. கருத்துக்களை வெளிப்படையாக, துணிச்சலாக வெளிப்படுத்த முடியும்
4. உடன்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள முடியும்
5. நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும்
6. பல்வேறு சூழல்களில் தனியாக-குழுவாக முடிவெடுக்கும் திறன் பெறமுடியும்
7. தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள முடியும்
8. தன் அடையாளத்தைக் கண்டடைந்து வளர்த்துக் கொள்ள முடியும்
9. தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், தற்சார்பு உடையவர்களாகவும் வடிவெடுக்க முடியும்
10. படிப்பு மற்றும் வேலையில் கவனத்தைச் செலுத்தவும் சிறப்பாகச் செயல்படவும் முடியும்
2025, மே 21 முதல் 30 வரை மொத்தம் 10 நாட்கள்
காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை
மாணவர்களாக இருந்தால் 14 முதல் 21 வயது வரை
பங்கு மக்களாக இருப்பின் 14 முதல் ஆர்வமுள்ளவர்கள் யாராக இருப்பினும். (ஆண், பெண் இருபாலரும்)
இருபாலருக்கும் கல்லூரி விடுதிகளில் தனித்தனியாக தங்கும் வசதியும், உணவும் ஏற்பாடு செய்யப்படும்.
கட்டணம் ஏதுமில்லை. பத்து நாட்களுக்கும் மூன்று வேளை உணவும், காலையும் மாலையும் தேநீர், மற்றும் சிற்றுண்டி இவையனைத்தும் இலவசம். பயிற்சி பொருட்கள், பயிற்சியாளர்கள் கட்டணம் உட்பட அனைத்துமே இலவசம்.
“கலைவழி இறைமொழி” என்னும் இந்தப் பயிற்சியில் பங்குபெற விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த அறிவிப்பு தொடர்பான ஐயங்கள், வினாக்கள் இருந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.
கலைகளில் ஈடுபாடுடைய கத்தோலிக்க மாணவ மாணவிகளைக் குறிப்பிட்ட கல்வி நிலையங்களோ, பங்குத் தந்தையர்களோ (Parish Priests) பரிந்துரைத்தும் அனுப்பி வைக்கலாம்.
இன்றைய இளையோர்கள் நவீன உலக மயமாக்கலில் தங்களை தொலைத்துக் கொள்ளாமல் கலைகளின் வழியே புத்தாக்கம் பெற்று படைப்புக்கு பயன் தந்திட தீபகம் முன்னெடுக்கும் இந்த ‘கலைவழி இறைமொழி” பெரிதும் வழிகாட்டும்.
பதிவு செய்யும் கடைசி நாள்: 30-04-2025
தொடர்புக்கு
அருட்திரு. ஜேசுதாஸ் ச.ச (தீபகம், இயக்குநர்)
வேதியர்: சாண்டோ (9840263623)
ஒருங்கிணைப்பாளர்: திருமதி. அமலி (9940693156)
முகவரி
அருட்திரு. ஜேசுதாஸ் ச.ச
இயக்குநர், தீபகம்
தி சிட்டல், எண். 45
கீழ்ப்பாக்கம், சென்னை
தமிழ்நாடு, 600 010, இந்தியா
மின்னஞ்சல்: deepagamdonbosco@gmail.com
வாட்ஸ்அப்: 9385201453 (@deepagamdonbosco)
இணையதளம்: www.deepagam.com